ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

சுங்கத்துறை ஊழியர்கள் நடத்திய சுகவீனப் போராட்டம் காரணமாக பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு !

பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கும் சாத்தியங்கள் இருப்பதாகச் சுங்கத் திணைக்களத்தின் விடுவிப்பு அலுவலர்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

அண்மையில் சுங்கத் திணைக்களத்தைச் சேர்ந்த பணியாளர்கள் சுகவீனப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இதனால் துறைமுகங்களில் தேங்கிக்கிடந்த பொருட்களை மேற்பார்வை செய்து விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டிருந்தது. அதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

, சுங்கத்துறை ஊழியர்கள் நடத்திய சுகவீனப் போராட்டம் காரணமாக பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு !

Back to top button