ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

நீர்வீழ்ச்சிக்கு சென்ற பிரான்ஸ் யுவதி தவறி விழுந்து பலி !

எல்ல, பல்லேவெல நீர்வீழ்ச்சிக்கு சென்ற பிரான்ஸ் யுவதி ஒருவர் கீழே தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். 19 வயதுடைய யுவதியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இந்த யுவதி கடந்த 25 ஆம் திகதி தனது காதலனுடன் இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில் இவர்கள் இருவரும் மற்றுமொரு சுற்றுலா தம்பதியினருடன் இணைந்து எல்ல, பல்லேவெல நீர்வீழ்ச்சிக்குச் சென்றுள்ளனர்.

இதன்போது இந்த யுவதி புகைப்படம் எடுப்பதற்காக நீர்வீழ்ச்சியின் கற்பாறைகளின் மேல் ஏறியுள்ள நிலையில் சுமார் 200 அடி கீழே தவறி விழுந்துள்ளார்.இதனையடுத்து, இந்த யுவதி காயமடைந்த நிலையில் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இந்த யுவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

, நீர்வீழ்ச்சிக்கு சென்ற பிரான்ஸ் யுவதி தவறி விழுந்து பலி !

Back to top button