ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

மட்டக்களப்பு மாவடிவேம்பு வைத்தியசாலைக்கு பழுதடைந்த பாண் ; கடை உரிமையாளருக்கு ஒருமாத சிறை !

மட்டக்களப்பு மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலைக்கு பழுதடைந்த பாண் வழங்கியகடை உரிமையாளருக்கு ஒரு மாதகால சிறைத்தண்டனையையும் வழங்கி திங்கட்கிழமை (08) ஏறாவூர் நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது .

மாவடி வேம்பு பிரதேச வைத்தியசாலை நோயாளிகளுக்கு காலை உணவாக மனித நுகர்விற்கு பொருத்தமற்ற பழுதடைந்த பாண் வழங்கியதால் நோயாளர்கள் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து சுகாதார வைத்திய அதிகாரி, மற்றும் செங்கலடி மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் வழிகாட்டலில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மனித நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுகளை வைத்தியசாலைக்கு வழங்கிய ஒப்பந்தகாரர் மற்றும் கடை உரிமையாளர் ஆகிய இருவருக்கும் எதிராக ஏறாவூர் நீதிவான் நீதிமன்றில் நேற்று திங்கட்கிழமை வழக்கு தாக்குதல் செய்து இருவரையம் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான் நோயாளர்களுக்கு உணவு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒப்பந்தகாரரின் ஒப்பந்தத்தினை உடனடியாக இரத்து செய்ததுடன், 10 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் அதை உரிய தவணையில் செலுத்த தவறினால் 3 மாதகால சிறைத்தண்டனையும் 10 வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட 3 மாத சிறை தண்டனையும் வழங்கியதுடன் உணவு தயாரித்து வழங்கிய கடை உரிமையாளருக்கு 5 ஆயிரம் ரூபா தண்டப்பணம் ஒரு மாதகால சிறை தண்டனையும் விதித்து ஏறாவூர் நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்து.

, மட்டக்களப்பு மாவடிவேம்பு வைத்தியசாலைக்கு பழுதடைந்த பாண் ; கடை உரிமையாளருக்கு ஒருமாத சிறை !

Back to top button