ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
மறைந்த தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் சம்பந்தனின் பூதவுடலுக்கு பா.ஜ.க.,வின் தமிழகத் தலைவர் அண்ணாமலை அஞ்சலி !


மறைந்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடலுக்கு பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
சம்பந்தனின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இன்னும் சற்று நேரத்தில் இறுதி ஊர்வலம் இடம்பெறவுள்ள நிலையில், சம்பந்தனின் வீட்டுக்கு சென்று, அன்னாரின் பூதவுடலுக்கு அரசியல்வாதிகள், பிரமுகர்கள் மற்றும் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
, மறைந்த தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் சம்பந்தனின் பூதவுடலுக்கு பா.ஜ.க.,வின் தமிழகத் தலைவர் அண்ணாமலை அஞ்சலி !