காரில் தப்பிச் சென்ற போதைப்பொருள் கடத்தல்காரர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு !
பொலிஸ் உத்தரவை மீறி காரில் தப்பிச் சென்ற போதைப்பொருள் கடத்தல்காரர் மீது அத்துருகிரிய பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரைக் கைது செய்வதற்காக பொலிஸ் அதிகாரிகள் சிலர் நேற்று (4) இரவு பிலியந்தலை பிரதேசத்திற்கு முச்சக்கரவண்டியில் சென்றுள்ளனர்.
இதன்போது, காரில் போதைப்பொருட்களை கடத்திச் சென்ற போதைப்பொருள் கடத்தல்காரரை கைது செய்ய முயன்ற போது சந்தேக நபர் பொலிஸ் அதிகாரிகள் பயணித்த முச்சக்கரவண்டியை மோதி விபத்துக்குள்ளாகி தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.
இதன்போது, பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதோடு சந்தேக நபரின் காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
சந்தேக நபர் காயத்துடன் காரில் தப்பிச் சென்று வைத்தியசாலைக்குச் சென்ற போது பொலிஸாாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
, காரில் தப்பிச் சென்ற போதைப்பொருள் கடத்தல்காரர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு !