Friday, September 6, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Top Newsவாகன விபத்தில் பலியான இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த !

வாகன விபத்தில் பலியான இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த !

வாகன விபத்தில் பலியான இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த ! கட்டுநாயக்க அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர்  சனத் நிஷாந்த உட்பட இருவர்  உயிரிழந்துள்ளனர்.

கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு நோக்கி  இராஜாங்க அமைச்சர் பயணித்த சொகுசு வாகனம், அதே திசையில் சென்ற கொள்கலன் லொறி ஒன்றின் பின்பகுதியில் மோதியுள்ளது.

பின்னர், பாதுகாப்பு வேலியில் வாகனம் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த இராஜாங்க அமைச்சர், அவரது பாதுகாப்பு அதிகாரி மற்றும் வாகனத்தின் சாரதி ஆகியோர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பலி

அங்கு இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை 2 மணியளவில் கட்டுநாயக்க அதிவேக வீதியின் R 11.1 கிலோமீற்றர் கம்பத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஜயகொடி என்ற பாதுகாப்பு அதிகாரியே இதன்போது உயிரிழந்தவராவார்.

காயமடைந்த வாகன சாரதி ராகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்ற நிலையில் விபத்து தொடர்பில் கந்தானை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்