சனத் நிஷாந்தவின் இடத்திற்கு ஜகத் பிரியங்கர நியமிக்கப்படவுள்ளார் !

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த வீதி விபத்தில் உயிரிழந்ததன் காரணமாக புத்தளம் மாவட்டத்தில் வெற்றிடமாகவுள்ள நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு ஜகத் பிரியங்கர நியமிக்கப்படவுள்ளார்.
இவர் கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து தேசிய சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்டார்.
தேசிய சுதந்திர முன்னணி தற்போது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துவதால், ஜகத் பிரியங்கரவும் எதிர்க்கட்சியில் அமர உள்ளார்.
முதலாம் இணைப்பு
வீதி விபத்தில் சிக்கிய இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பலி!
கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்துள்ளார்.
இராஜாங்க அமைச்சரும் மேலும் நால்வரும் பயணித்த வாகனம் கொள்கலன் ஊர்தியொன்றுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில் சனத் நிஷாந்தவும் அவரது தனிப்பட்ட மெய்ப்பாதுகாப்பு உத்தியோகத்தரும் உயிரிழந்துள்ளதாக ராகம வைத்தியசாலையின் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.