இரண்டு பிள்ளைகளின் தந்தை சு ட் டு க் கொல்லப்பட்ட வழக்கு : நீதி கோரும் பெண் !

இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தொடர்பான உண்மைகளை ஆராய்ந்து வருவதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பரிசோதனை செய்யப்படுவதாக தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது நாவுல பிரதேசத்தை சேர்ந்த துஷார சந்திரரத்ன என்பவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு காரணமான பொலிஸ் சார்ஜன்ட்களான டபிள்யூ.எம்.விஜேதுங்க மற்றும் ஜனக ருவன் அமரசிங்க ஆகியோருக்கு எதிராக கொடூரமான சித்திரவதைக்கு எதிரான சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யுமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவு ஒன்றை வௌியிடுமாறு கோரி, உயிரிழந்தவரின் மனைவி தினுஷா குமாரியினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்று (01) அழைக்கப்பட்ட போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட துணை சொலிசிட்டர் ஜெனரல் திலீப் பீரிஸ் இதனை தெரிவித்திருந்தார்.
, இரண்டு பிள்ளைகளின் தந்தை சு ட் டு க் கொல்லப்பட்ட வழக்கு : நீதி கோரும் பெண் !