மட்டக்களப்பில் யானை தாக்கி வர்த்தகர் ஒருவர் பலி.!!
மட்டக்களப்பில் யானை தாக்கி வர்த்தகர் ஒருவர் பலி.!! மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை, வெலிகந்தை செவனப்பிட்டிய நகருக்கு அருகில் காட்டு யானை தாக்கியதில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்று முன்தினம் புதன்கிழமை வியாபாரம் செய்யச் சென்றபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மன்னம்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
விநாயகபுரம், பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஆறு பிள்ளைகளின் தந்தையான முருகேசு முனியாண்டி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் மன்னம்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
செவனப்பிட்டி சந்தைக்கு தனது குடும்பத்துடன் பொருட்களை விற்பனை செய்வதற்காக
அவர் சென்று கொண்டிருந்தபோதே காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகி மனம்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.