பிராந்திய செய்திகள்ஏனைய பிராந்திய செய்திகள்
வாகன விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழப்பு!

வாகன விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கதிர்காமம் பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் 22 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இவர் வெலிமடை பகுதி யில் வசிப்பவராவார்.
இன்று (24) பிற்பகல் திஸ்ஸமஹாராம கதிர்காமம் வீதியில் புஞ்சி அகுருகொட பிரதேசத்தில் தனியார் பஸ் ஒன்று திஸ்ஸமஹாராமவில் இருந்து கதிர்காமம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
பேருந்து, இரட்டைக் கோடு விதிகளை மீறி, அதே திசையில் சென்ற டிராக்டரை முந்திச் செல்லும் போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளின் பின்னால் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் பலத்த காயங்களுக்கு உள்ளாகி தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்