ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே எனது ஆதரவு : பிரசன்ன ரணதுங்க !

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பக்குவமான பணியைச் செய்யக்கூடியவர் ஒரு நாட்டின் தலைவராக இருக்க வேண்டுமே தவிர தற்பெருமை பேசுபவராக இருக்கக்கூடாது என்றும் அமைச்சர் கூறினார்.

கம்பஹா மாவட்ட அரசியல் செயற்பாட்டாளர்களுடன் உடுகம்பொலவில் நேற்று முன்தினம் (27) நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதித் தேர்தலுக்கு எமது கட்சி வேட்பாளரை முன்வைக்குமா? என்ற உரையாடல் எழுந்தபோது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்போம் என்று கூறினேன். நாங்கள் ஜனாதிபதித் தேர்தலுக்கு எமது கட்சி வேட்பாளரை முன்வைக்குமா என்ற உரையாடல் எழுந்தபோது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்போம் என்று கூறினேன். நாங்கள் அனைவரும் 27 தேர்தல்களில் அவரை தோற்கடித்ததைப் போல, எங்களால் மட்டுமே அவரை வெற்றி பெறச் செய்ய முடியும். ஏன் அவரை வெற்றி பெற வைக்கிறோம்? ஏனெனில் இந்த நாட்டிற்கு வலுவான பலமான அரசாங்கம் தேவை. மொட்டுக் கட்சியை உருவாக்கி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு அதிகாரத்தை கைப்பற்றிய எங்களுக்கு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அவ்வேளையில் எமது கட்சி உறுப்பினர்களைப் பாதுகாத்து அச்சமின்றி அரசியல் செய்வதற்குரிய சந்தர்ப்பத்தை ரணில் விக்கிரமசிங்க அவர்களே உருவாக்கினார். அதை நான் பயப்படாமல் சொல்வேன்.

மே 09 அன்று நடந்த சம்பவத்தால் நாங்கள் ஆதரவற்ற நிலையில் இருந்தோம். அப்போது தற்போதைய ஜனாதிபதி ஜனாதிபதியாக பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே போராட்டத்தை அடக்கினார்” எனத் தெரிவித்தார்.

, ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே எனது ஆதரவு : பிரசன்ன ரணதுங்க !

Back to top button