பிரதான செய்திகள்
கொழும்பு ஜிந்துபிட்டி பகுதியில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் படுகாயம்
கொழும்பு – ஜிந்துபிட்டிய பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இன்று (24) இரவு 9 மணியளவில் இடம்பெற்றள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இதன்படி துப்பாக்கிச்சூடு தொடர்பில் ஆட்டுபட்டித்தெரு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக கூறப்படுகிறது.