ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

போரதீவுப்பற்றுப் பிரதேச புன்னக்குளம் கிராமத்தில் வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை – சந்திரகாந்தனால் காப்பெட் வீதி மக்கள் பாவனைக்கு கையளிப்பு

(சித்தா)

போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புன்னக்குளம் நாகதம்பிரான் கோவில் வீதி காப்பெட் வீதியாகச் செப்பினடப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. இவ் வீதியானது அப்பிரதேச விவசாயிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக 50 மில்லியன் பணம் வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் செப்பினப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியிலாளர் மாதுளன், பட்டிருப்பு கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் ஜீவானந்தராசா, கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன், கட்சியின் பிரதிச் செயலாளர் சந்திரகுமார், பிரதேசக் குழுச் செயலாளர் பிரசாத், இணைப்பாளர் கருணைராஜன் ஆகியோருடன் கிராம மட்ட அமைப்புகளின் நிருவாகிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

, போரதீவுப்பற்றுப் பிரதேச புன்னக்குளம் கிராமத்தில் வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை – சந்திரகாந்தனால் காப்பெட் வீதி மக்கள் பாவனைக்கு கையளிப்பு

Back to top button