ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

இலங்கை கடன் மறுசீரமைப்பு: இறுதி உடன்பாடு எட்டப்பட்டது !

இலங்கை அரசாங்கத்துக்கும் இலங்கைக்கு கடன் வழங்கும் குழுவுக்கும் இடையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரான்ஸின் பாரிஸ் நகரில் இந்த உடன்பாடு எட்டப்பட்டதாக அமைச்சர் சேமசிங்க தனது எக்ஸ் தளத்தில் இன்று பதிவிட்டுள்ளார்.

இந்த உடன்பாடு எட்டப்பட்டமை தொடர்பில் மகிழ்ச்சி அடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கைக்கும் சினாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கிக்கும் இடையே இருதரப்பு கடன் உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக கடன் வழங்கும் குழுவைச் சேர்ந்த பிரான்ஸ், இந்தியா, ஜப்பான் மற்றும் சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி ஆகிய தரப்பினருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் கடன் நெருக்கடிக்கு தீர்வு காணவும் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தவும் இந்த மைல்கல்லை எட்டுவதற்கு கடன் வழங்கும் குழுவின் செயலகம் முக்கிய பங்காற்றியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

, இலங்கை கடன் மறுசீரமைப்பு: இறுதி உடன்பாடு எட்டப்பட்டது !

Back to top button