ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
இலங்கை – வியட்நாம் இடையில் கல்வித்துறை ஒப்பந்தம் !

இலங்கை மற்றும் வியட்நாம் நாடுகளுக்கிடையில் உயர் கல்வி ஒத்துழைப்புக்கள் தொடர்பான ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக, கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கைக்கும் வியட்நாமுக்குமிடையிலான உயர்கல்வித் துறையை மேலும் அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக 2017 முதல் 2020 வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தைத் திருத்தங்களுடன் 2024-2026 வரையான காலப்பகுதியில் நடைமுறைப்படுத்துவதற்கு இருதரப்பினரும் உடன்பாடு தெரிவித்துள்ளனர்.
, இலங்கை – வியட்நாம் இடையில் கல்வித்துறை ஒப்பந்தம் !