யால தேசிய பூங்காவில் மிக நுட்பமாக பயிரிடப்பட்ட இரண்டு கஞ்சா பயிர்ச்செய்கைகளை பொலிஸார் ட்ரோன் கமெரா தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கண்டுபிடித்துள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உடவளவ முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் போது 35 பேர்ச்சஸ் மற்றும் 25 பேர்ச்சஸ் பரப்பளவிலான காணியில் கஞ்சா பயிரிடப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகளை கதிர்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
, கஞ்சா செய்கையை ட்ரோன் மூலம் கண்டுபிடித்த பொலிஸார் !