திருகோணமலை திருக்கோனேஸ்வரர் ஆலய கடை தொகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) மாலை இடம் பெற்றுள்ளது.
கைதானவர் 42 வயதுடைய மிகிந்தபுரம் பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் 15போத்தல்களில் 14 போத்தல்களை விற்பனை செய்துள்ள நிலையில் எஞ்சியுள்ள ஒரு கசிப்பு போத்தலை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் .
கைது செய்யப்பட்ட நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் நாளை செவ்வாய்க்கிழமை (25) திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை திருகோணமலை தலைமையகப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
, திருக்கோணேஸ்வரர் ஆலய கடைத் தொகுதியில் கசிப்பு விற்றவர் கைது !