ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
அடுத்த 10 நாட்களுக்குள் சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் : பரீட்சைகள் திணைக்களம் !

2023 (2024) ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த 10 நாட்களுக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த வாரத்திற்குள் பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அவ்வாறு இல்லையெனில் அடுத்த 10 நாட்களுக்குள் பெறுபேறுகள் வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
சாதாரண தரப் பரீட்சைகள் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. அதில் 452,979 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றினர். அவர்களில் 387,648 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் மற்றும் 65,331 பேர் தனியார் விண்ணப்பதாரர்கள் அடங்குவர்.
, அடுத்த 10 நாட்களுக்குள் சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் : பரீட்சைகள் திணைக்களம் !