Tuesday, July 23, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Local NewsOther Local Newsபொலிசாரின் சன்மான பணத்தை மோசடி செய்த பொலிஸ் சாஜன் ஒருவருக்கு பணி இடைநீக்கம் !

பொலிசாரின் சன்மான பணத்தை மோசடி செய்த பொலிஸ் சாஜன் ஒருவருக்கு பணி இடைநீக்கம் !

பொலன்னறுவை பொலிசாருக்கு வழங்கும் சன்மான பணமான 74 இலட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்து பிணையில் வெளிவந்த ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் சாஜன் ஒருவரை வெள்ளிக்கிழமை (21) பணியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பொலிஸ் சாஜன் 2021ம் ஆண்டு பொலன்னறுவை பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றி வந்த போது அங்கு பொலிசாருக்கு சன்மானமாக வழங்கும் பணமான 74 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ள நிலையில் இடமாற்றம் பெற்று ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் இந்த மோசடி தொடர்பாக பொலன்னறுவை விசேட குற்றப் புலன் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுவந்த நிலையில் இவரைக் கடந்த 18 ம் திகதி கைது செய்து பொலன்னறுவை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்துள்ளார்.

இவ்வாறு பிணையில் வெளிவந்தவரை உடனடியாக பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

, பொலிசாரின் சன்மான பணத்தை மோசடி செய்த பொலிஸ் சாஜன் ஒருவருக்கு பணி இடைநீக்கம் !

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்