ஹங்வெல்ல – ஜல்தர பிரதேசத்தில் பாடசாலை மாணவியை கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 08 இளைஞர்களும் இன்று (23) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது அவர்களை மணிநேரம் 48 தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு ஹோமாகம பதில் நீதவான் பிரியங்கா மத்தும பட்டபெந்திகே உத்தரவிட்டுள்ளார்.
அந்தக் குழுவில் மாணவனின் காதலன் என்று கூறிக்கொள்ளும் இளைஞனும் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்தேக நபர்களை மேலும் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதிளிக்குமாறு ஹங்வெல்ல பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரணால மற்றும் ஜல்தர பிரதேசங்களை சேர்ந்த குழுவொன்றே இவ்வாறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டது.
16 வயதுடைய பாடசாலை மாணவியொருவர், அவரது காதலன் மற்றும் அவரது நண்பர்களால் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கடந்த 21ஆம் திகதி பதிவாகியுள்ளது.
, மாணவியை கூ ட் டு பா லி ய ல் து ஷ் பி ர யோ க ம் செய்த எண்மருக்கு பிறப்பித்த உத்தரவு !