சுங்க வரி செலுத்தாமல் இறக்குமதி செய்த மோட்டார் சைக்கிள்களுடன் 3 இளைஞர்கள் கைது !
சுங்க வரி செலுத்தாமல் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 1 1/2 கோடி ரூபா பெறுமதியான அதிக திறன் கொண்ட மூன்று மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் சென்ற மூன்று இளைஞர்கள் பெப்பிலியானையில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.
மூன்று மோட்டார் சைக்கிள்களில் இரண்டில் பதிவு இலக்கத் தகடுகள் இணைக்கப்பட்டிருந்ததுடன், கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவரின் தாயாரின் பெயரில் பதிவுசெய்யப்பட்ட ஸ்கூட்டர் மோட்டார் சைக்கிளின் பதிவு இலக்கத் தகடு அந்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் இணைக்கப்பட்டிருந்தமை ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொரலஸ்கமுவ, பாணந்துறை மற்றும் கொழும்பு 02 ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்ட 20 மற்றும் 26 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட மூவரும் எதிர்வரும் நாட்களில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
, சுங்க வரி செலுத்தாமல் இறக்குமதி செய்த மோட்டார் சைக்கிள்களுடன் 3 இளைஞர்கள் கைது !