ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

வாவியில் மூழ்கிய இளைஞன் பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் உயிருடன் மீட்பு !

அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பசவக்குளம் வாவியில் மூழ்கி உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

தொலுகந்த, பூஸா பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரொருவரே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் பசவக்குளம் வாவியில் நீராடிக்கொண்டிருக்கும் போது திடீரென நீரில் மூழ்கியுள்ளார்.

இந் நிலையில் அங்கு கடமையிலிருந்த பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர் இவரைக் காப்பாற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

, வாவியில் மூழ்கிய இளைஞன் பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் உயிருடன் மீட்பு !

Back to top button