ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

இலங்கையின் இறையாண்மைக்கு பாரிய பிரச்சினை : பேராயர் கர்தினால் !

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உத்தேச பாலத்தின் ஊடாக எதிர்காலத்தில் இலங்கையின் இறையாண்மைக்கு பாரிய பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு பாலம் அமைப்பதன் ஊடாக 2,000 வருடங்களாக பாதுகாக்கப்பட்ட சுதந்திரம் இல்லாமல் போகக்கூடும்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பாலத்தை அமைப்பதன் மூலம் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக இலங்கை மாறிவிடும்.

அரசாங்கம் முன்மொழிந்துள்ள இந்த பாலம் அமைக்கும் திட்டத்தை தாம் முற்றிலும் எதிர்ப்பதாகவும் இந்தியர்களும் இதனை எதிர்க்க வேண்டும் எனவும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

, இலங்கையின் இறையாண்மைக்கு பாரிய பிரச்சினை : பேராயர் கர்தினால் !

Back to top button