பெலவத்தை – நெலுவ வீதியின் யட்டபொத பிரதேசத்தில் தனியார் பயணிகள் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி அருகில் இருந்த பெரிய மரத்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து நேற்று (22) இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் காரணமாக பேருந்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், பேருந்தில் பயணித்த சுமார் 12 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
, வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி பேருந்து விபத்து : 12 பேர் காயம் !