ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

இருட்டைத் திட்டுவதற்கு பலர் இருந்தாலும் இருட்டை நீக்கி வெளிச்சத்தைக் கொண்டுவர ஒருவர் தேவை. அந்த ஒருவராக ஜனாதிபதி இந்த நாட்டைப் பொறுப்பேற்றார் : அமைச்சர் வியாழேந்திரன் !

எமது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருந்த நேரத்தில், முன்னாள் ஜனாதிபதி பலருக்கும் அழைப்பிவிடுத்தார். யாரும் இந்நாட்டைப் பொறுப்பேற்ற முன்வரவில்லை. அத்தியவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள மக்கள் கையில் பணம் இருந்தாலும் வரிசைகளில் பல நாட்கள் நிற்க வேண்டிய நிலை காணப்பட்டது. இந்த நாடு மீண்டும் மீண்டுவரக்கூடிய சூழல் இருக்கவில்லை. அந்நேரத்தில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க துணிச்சலாக முன்வந்து, வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை பொருளாதார ரீதியில் மீளக்கட்டியெழுப்ப நாட்டைப் பொறுப்பேற்றார்.

இருட்டைத் திட்டுவதற்கு பலர் இருந்தாலும் இருட்டை நீக்கி வெளிச்சத்தைக் கொண்டுவர ஒருவர் தேவை. அந்த ஒருவராக ஜனாதிபதி இந்த நாட்டைப் பொறுப்பேற்றார். அவரின் தலைமைத்துவத்தடன் முன்னெடுக்கப்பட்ட கூட்டு முயற்சியால் படிப்படியாக பொருளாதாரம் எழுச்சி கண்டு வருவது மிகவும் பாராட்டுக்குரியது.

நாடளாவிய ரீதியில் உறுமய காணி உறுதிப்பத்திரம் வழங்கும் பாரிய திட்டத்தை ஜனாதிபதி செயற்படுத்தி வருகின்றார். இதுவரை வசித்து வந்த காணிகளுக்கு உரிமையற்றவர்களாக மக்கள் இருந்தனர். ஆனால் தற்போது அந்த உரிமை மக்களுக்கே வழங்கப்படுகிறது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் மக்கள் பிரதிநிதிகள் உட்பட அரச அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். இன்று ஆசிரியர் நியமனங்களும் வழங்கப்பட்டன. இதன்மூலம் மட்டக்களப்பு மாவட்டம் கல்வித்துறையில் மேலும் வளர்ச்சியடையும்.’’ என்று வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்,  தெரிவித்தார்.

, இருட்டைத் திட்டுவதற்கு பலர் இருந்தாலும் இருட்டை நீக்கி வெளிச்சத்தைக் கொண்டுவர ஒருவர் தேவை. அந்த ஒருவராக ஜனாதிபதி இந்த நாட்டைப் பொறுப்பேற்றார் : அமைச்சர் வியாழேந்திரன் !

Back to top button