ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
பாணந்துறை கடலில் நீராடிய 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி !


பாணந்துறை கடலில் நீராடிக் கொண்டிருந்த 10 பேர் திடீரென சுகயீனமடைந்துள்ள நிலையில் அவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
கடலிலிருந்த ஜெலிமீன்கள் கடலில் நீராடிக் கொண்டிருந்தவர்களின் உடல்களில் பட்டதால் அங்கு இருந்த அனைவருக்கும் தோல் அரிப்பு மற்றும் தோல் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, சுகயீனமடைந்தவர்கள் அனைவரும் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
, பாணந்துறை கடலில் நீராடிய 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி !