பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 50,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் !!
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள 11,100 விகாரைகளின் பாதுகாப்பிற்காக 50,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன்படி , 47,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள், 400 பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் 700 இராணுவ அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொசன் பொளர்ணமி தினம் நடைபெறும் மிஹிந்தலை, ஸ்ரீ மகாபோதி, அதமஸ்தான், தந்திரிமலை, அவுகன, விஜிதபுர மற்றும் நாமல் உயன ஆகிய விகாரைகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் , அனுராதபுர நீர்த்தேக்கங்களில் குளிக்கும் மக்களின் பாதுகாப்பிற்காக 400 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அநுராதபுரம் விகாரைகளுக்கு அருகில் 4,000க்கும் அதிகமான பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
, பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 50,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் !!