“கந்துகர தசகய” பத்து சிறப்பு ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 97 பிரதேச செயலகங்களில் 14,088 வேலைத்திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக இவ்வருடம் 9,622 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ. எஸ் சத்யானந்த தெரிவித்தார்.
மேலும், யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களின் வீட்டுத் தேவைகளில் 89 வீதமானவை 2023 இறுதிக்குள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், மொத்தமான மீள்குடியேற்ற வேலைத்திட்டத்தில் இதுவரை 275,127 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ. எஸ்.சத்தியானந்த இவ்வாறு குறிப்பிட்டார்.
, “கந்துகர தசகய” வின் கீழ் 9,622 மில்லியன் ரூபா செலவில் 97 பிரதேச செயலகப் பிரிவுகளில் 14,088 வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன !