இன்றைய நவீன உலகிலே சமூக கட்டமைப்பானது E -SOCIETY எனும் அளவிற்கு இலத்திரனியல் ஊடகத்துடன் இணைந்த ஒன்றாக உள்ளது ஏனெனில் தற்கால தொழில்நுட்ப உலகில் மக்களின் வாழ்க்கை முறை அனைத்தும் இலத்திரனியல் ஊடகங்களை நோக்கியதாகவே அமைந்துள்ளன மக்கள் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்து தொடர்பு கொண்டதை தவிர்த்து நிகழ்நிலை(online) மூலம் ஒருவரோடு ஒருவர் தொடர்பினை கொள்வதற்கு பயன்படுத்துகின்ற ஒன்றாக இலத்திரனியில் ஊடகங்கள் காணப்படுகின்றது.
தகவலின் விரைவான பரிமாற்றத்திற்கு உதவுகின்றது கற்றல் கற்பித்தல் செயல்முறையில் தகவல் பரிமாற்றமானது இன்றியமையாத ஒன்றாக காணப்படுகின்றது அவ்வாறே இந்த விரைவான தகவல் பரிமாற்றமானது மாணவர்களை சமூகமயமாக்கலுக்கு இட்டுச் செல்லக்கூடிய ஒன்றாக உள்ளது ஆசிரியர்களிடம் இருந்து மாணவர்கள் பல்வேறு கற்றல் கற்பித்தல் தொடர்பான விடயங்களை ZOOM, WHAT’S APP GROUP போன்ற இலத்திரனியல் ஊடகங்கள் மூலமாக பெற்று தங்களுடைய அறிவினை பெற்றுக் கொள்கின்றனர் இவை மட்டுமின்றி தாம் அறிந்த தகவல்களை ஏனையோருக்கு இலகுவாக வழங்குவதற்கும் இலத்திரனியல் ஊடகங்கள் உந்துகோலாக அமைகின்றது இதன் ஊடாக மாணவர்களின் கல்விச் சமூகமயமாக்கல் தன்மை விரிவுபடுத்தப்படுகின்றது.
இன்றைய காலங்களில் இலத்திரனியல் ஊடகங்களின் மூலமாக மாணவர்கள் தமக்கு தேவையான எவ்வகையான விடயங்களையும் சொர்ப்ப நேரத்தில் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பான ஒன்றாக இலத்திரனியல் ஊடகங்கள் காணப்படுகின்றது முன்னைய காலங்களில் ஒரு தகவலினை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் மாணவர்கள் பத்திரிகைகள் சஞ்சிகைகள் இலக்கியங்களை தேடி ஆராய்ந்து பெற்றுக் கொள்கின்ற நிலைமை காணப்பட்டது இவ்வாறான சந்தர்ப்பங்களில் நேரம் வீண் விரயமாக்கப்படும் தன்மை காணப்பட்டது ஆனால் இன்றைய காலத்தில் எப்போது வேண்டுமானாலும் எவ்வாறான தகவல்களையும் YOUTUBE, E-Library, WHAT’S APP போன்ற ஊடகங்களின் மூலமாக இலகுவாக குறுகிய நேரத்தில் பெற்றுக்கொள்ள முடிவதனால் மாணவர்களிடையே விரைவான இணைய வழி சமூகமயமாக்கல் தன்மை ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.
சமீப காலத்திலேயே முழு உலகினையும் உலுக்கிய ஒரு நிகழ்வாக COVIDE19 நோய் தொற்று காரணமாக முழு மாணவர்களும் தமது கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை இலத்திரனியல் ஊடகங்களின் மூலமாக மேற்கொண்டமையை அவதானிக்க கூடியதாய் இருந்தது ZOOM, WHAT’S APP, MICROSOFT TEAMS, LMS போன்றவற்றினை மாணவர்கள் அதிகளவாக பயன் படுத்துவதற்கான சந்தர்ப்பமானது அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கப்பெற்றதனை அவதானிக்க முடிந்தது அதனூடாக மாணவர்களின் விரைவான கல்விச் சமூகமயமாக்கல் தன்மையானது ஏற்படுத்தப்பட்டுள்ளது
இவை மட்டுமல்ல மாணவர்கள் நேரில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதை காட்டிலும் நவீன இலத்திரனியல் தொழில்நுட்பத்தின் மூலம் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளும்போது மாணவர்கள் இடையே அதீத கவன ஈர்ப்பு விருப்பம் நாட்டம் போன்றவை ஏற்படுத்துகின்றது அதீதமாணவர்களின் கவனத்தை ஈர்க்கின்ற ஒன்றாக நவீன இலத்திரனியல் ஊடகங்கள் உருவாக்கப்பட்டுள்ளதனைக் காண முடிகின்றது VIDEO, SMART CLASS ROOM, LAPTOP, COMPUTER போன்றவற்றின் மூலமாக கற்பதன் ஊடாக மாணவர்கள் இலகுவாகவும் விரைவாகவும் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டினை மேற்கொள்வதோடு அவர்களிடையே சமூகமயமாக்கப்பட்ட தன்மையும் வளர்ச்சி அடைகின்றது
இன்றைய 21 ஆம் நூற்றாண்டுக்குரிய சமூகமானது தீவிரமாக வளர்ச்சி அடைய முக்கிய பங்கினை இலத்திரனியல் ஊடகங்கள் மேற்கொள்கின்றது அந்த வகையில் வாசிப்பு மனிதனை பூரணப்படுத்துகின்றது என்ற வாசகத்திற்கு இணங்க இலத்திரனியல் ஊடகங்களின் மூலமாக மாணவர்களது வாசிப்பு வீதமானது அதிகமாவதுடன் சமூகமயமாக்கல் தன்மையும் அதிகரிப்பதனை காணக்கூடியதாய் உள்ளது நவீன இலத்திரனியல் தொழில்நுட்ப சாதனங்களின் மூலம் மாணவர்கள் தமக்கு தேவையான விடயங்களை விரைவாக வாசித்து தெரிந்து கொள்கின்றனர் வாசிப்பு வீதம் அதிகரித்து செல்வதன் மூலமாக மாணவர்கள் இலகுவான முறையிலும் விரைவாகவும் சமூகமயமாக்கல் தன்மையை பெற்றுக் கொள்கின்றனர்.
இவை மட்டுமின்றி மாணவர்கள் ஒரு விடயத்தினை தேடிப்போய் கற்பதற்கு பதிலாக இலகுவாக INTERNET மூலம் கற்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றது வீட்டில் இருந்தவாறே கற்றல் கற்பித்தல் செயன்முறையினை மேற்கொள்ளும் வகையில் கற்றலுக்கான வாய்ப்புகள் நவீன இலத்திரனியல் தொழில் நுட்ப சாதனங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளதால் மாணவர்களை இலகுவாக சமூகமயமாக்கல் தன்மைக்கு இட்டு செல்லக்கூடியதாக நவீன இலத்திரனியல் தொழில்நுட்பமானது காணப்படுகின்றது
INTERNET மூலம் கருத்தரங்குகள் மற்றும் மேலும் பல பட்ட படிப்பிற்கான வாய்ப்புக்கள் கிடைக்கப்பெறுவதன் மூலம் மாணவர்கள் சமூகமயமாக்கல் நோக்கி நகர்வதை அவதானிக்க முடிகின்றது
மேலும் இலத்திரனியல் ஊடகங்களின் குறிப்பிடக் கூடியதொரு முக்கியத்துவம் யாதெனில் செலவு குறைந்த தன்மை காணப்படுகின்றது அதாவது நவீன இலத்திரனியல் சாதனங்களை மாணவர்கள் இலகுவாக பயன்படுத்தும் வண்ணம் இலவசமான இணைய வசதி wifi வசதி போன்றன அரசாங்கத்தால் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களின் மூலமும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது இதனால் மாணவர்கள் ONLINE மூலமாக கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபடுகின்றனர் அது மட்டுமன்றி போக்குவரத்து வசதி குன்றியவர்கள் கற்றலுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு பொருளாதார ரீதியாக இன்னல்களை எதிர்கொள்கின்ற மாணவர்கள் இலகுவான முறையில் SMART PHONE மூலமாக தமது கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர்.
கல்வி தொடர்பான விடயங்களை மட்டுமின்றி கற்றலுக்கு அப்பால் உள்ள ஏனைய அனைத்து விடயங்களையும் மாணவர்கள் விளங்கிக் கொள்வதன் மூலம் சிறந்த சமூகமயமாக்கலை பெற்றுக் கொள்கின்றனர் அந்த வகையில் நவீன இலத்திரனியல் தொழில்நுட்ப சாதனங்களின் ஊடாக மாணவர்கள் கல்வி அரசியல் பொருளாதாரம் விஞ்ஞானம் விளையாட்டு போன்ற பல்வேறு விடயங்களை கற்றுக் கொள்கின்றனர் இதன் மூலம் புதிய சமூகத்தினை நோக்கி நகர்வதன் ஊடாக சமூகமயமாக்கல் தன்மையை இலகுவாக அடைந்து கொள்கின்றன.
மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளின் பொருட்டு தூர இடங்களுக்கு சென்று வர வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படுவதுண்டு. ஆனால் நவீன இலத்திரனியல் சாதனங்களின் ஊடாக இந்நிலைமையை மாற்றி அமைக்கப்படுகின்றது அதாவது வீட்டில் இருந்தவாறு தகவல்களை பெற்றுக் கொள்கின்றனர் தூர இடங்களில் நூலகம் இருக்குமாயின் நூலகத்திற்குச் சென்று கற்றலுக்கு தேவையான விடயங்களை பெற்றுக் கொள்வதற்கு இடையூறாக அமைகின்றது இந்நிலையை இல்லாதொழிக்கும் பொருட்டு நூல்களை E-LIBRARY மூலம் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலைமை காணப்படுகின்றது. இதன் மூலம் மாணவர்கள் தாம் அறிகின்ற பல்வேறு விடயங்களை தமது நண்பர்களும் அறியக்கூடிய வகையில் தகவல்களை உடனடியாக பகிர்கின்றனர் இதன் ஊடாக கல்வி சமூகமயமாக்கலை அனைவரும் அடைந்து கொள்கின்றனர்.
ஒட்டுமொத்தமாக நோக்குகின்ற போது மாற்றம் ஒன்றே மாறாதது என்ற கோட்பாட்டிற்கு இணங்க மாணவர்களின் கல்விச் சமூகமயமாக்கலை விரிவுபடுத்துவதில் தொழில்நுட்ப அறிவு வளர்ச்சி அடைதல் அரசியல் நிலவரங்களை புரிந்து கொள்ளுதல் விழிப்புணர்வு கருத்துக்களை பெற்றுக்கொள்ளுதல் விரைவான தகவல் பரிமாற்றம் கற்றல் கற்பித்தல் தொடர்பான நவீன ஊடகங்களை பயன்படுத்துதல் இதன் ஊடாக மாணவர்களை சமூகமயப்படுத்துதல் போன்ற பல்வேறு அடிப்படையான விடயங்களுக்கு நவீன இலத்திரனியல் ஊடகங்களின் பங்களிப்பானது முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது
சிவநாதன் . அகலியா,
நான்காம் வருடம், கல்வியியல் சிறப்புக்கற்கைமாணவி,
கல்வி மற்றும் பிள்ளை நலத்துறை.
, கல்வி சமூகமயமாக்கலை ஏற்படுத்துவதில் இலத்திரனியல் ஊடகங்களின் செல்வாக்கு .