மிஹிந்தலையில் வாகன விபத்து: இருவர் படுகாயம் !

மிஹிந்தலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக மிஹிந்தலாய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து தம்புள்ளை நோக்கி பயணித்த மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று இன்று அதிகாலை மிஹிந்தலை பலுகஸ்வெவ பகுதியில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது லொறியில் மூவர் பயணித்ததாகவும், லொறியில் பயணித்த உதவியாளரும், லொறியின் உரிமையாளரும் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லொறியின் சாரதியின் கவனயீனம் காரணமாக இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
, மிஹிந்தலையில் வாகன விபத்து: இருவர் படுகாயம் !