ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை !
தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு சட்டரீதியான உரிமை கிடையாது எனவும் அதன் ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”அண்மையில் அதிகாரிகள் குழுவொன்று மற்றவர்களை மிரட்டியதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவத்திற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
, தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை !