ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

சாஹிரா கல்லூரி பரீட்சை பெறுபேறு சில தினங்களில் வெளியிடப்படும் !

திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவர்களின் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும். அது தொடர்பான நடவடிக்கைகளை பரீட்சை ஆணையாளர் நாயகம் முன்னெடுத்து வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (19) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய இடையீட்டு கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தனது கேள்வியின்போது, திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகள் 70 பேரின் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இடை நிறுத்தப்பட்டிருக்கிறது. பரீட்சை பெறுபேறுகள் ஒரு வாரகாலத்துக்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என இந்த சபையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தீர்கள். ஆனால் இதுவரை பெறுபேறுகள் வெளியிடப்படவில்லை.

அதனால் அந்த மாணவிகளுக்கு அநீதி ஏற்படாமல் அவர்களின் பெறுபேறுகளை விரைவாக வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

, சாஹிரா கல்லூரி பரீட்சை பெறுபேறு சில தினங்களில் வெளியிடப்படும் !

Back to top button