ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

காத்தான்குடியில் இடம்பெற்ற விபத்தில் 5 பிள்ளைகளின் தந்தை பலி!

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவு டீன் வீதி ஏ.எல் எஸ். மாவத்தை வீதியில் புதன்கிழமை (19) மாலை மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீட்டோன்றின் மதிலில் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே (43) வயதான நபர் உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாயாரைப் பார்ப்பதற்காக அப்றார் நகர், 4ம் குறுக்கு வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகில் காணப்பட்ட வீடொன்றின் மதிலில் மோதியமையால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

05 பிள்ளைகளின் தந்தையான (43) வயது நபரே இவ்வாறு உயிழந்துள்ளார். சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

, காத்தான்குடியில் இடம்பெற்ற விபத்தில் 5 பிள்ளைகளின் தந்தை பலி!

Back to top button