சர்வதேச நாணய நிதியத்தின் அண்மைய அறிக்கைக்கு அமைய, அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் இலங்கையில் அடுத்த மாதத்திற்குள் தொடர்ச்சியான வரி மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பான இரண்டாவது மதிப்பாய்வை அடுத்து சர்வதேச நாணய நிதியம் பல முக்கிய வரி சீர்திருத்தங்களை முன்னெடுக்க அழுத்தம் கொடுத்துள்ளது.
டிஜிட்டல் சேவையுடன் தொடர்புபட்ட துறைகளுக்கு வட் எனப்படும் பெறுமதி சேர் வரியை அறவிடுதல் மற்றும் ஏற்றுமதி சேவைகளுக்கு தற்போது விதிக்கப்படும் வருமான வரியில் விலக்களிக்கப்படுவதும் முக்கிய திருத்தங்களாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியிருந்தது.
இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் அண்மைய அறிக்கைக்கு அமைய, அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் இலங்கையில் அடுத்த மாதத்திற்குள் தொடர்ச்சியான வரி மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், விற்பனைச் செயற்பாடுகளுக்கு அறவிடப்படும் சமூக பாதுகாப்பு வரிக்கு பதிலாக பெறுமதி சேர் வரி அறவிடப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மதுபானம், புகையிலை மற்றும் விளையாட்டு நிறுவனங்களுக்கு அறவிடப்படும் வர்த்தக வருமான வரியானது 40 வீதத்தில் இருந்து 45 வீதமாக அதிகரிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
, அரசாங்க வருவாயை அதிகரிக்க நடவடிக்கை !