ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
வீதியோர வியாபாரத்தை தடைசெய்யக் கோரி திருகோணமலை மத்திய பொதுச் சந்தை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் !


திருகோணமலை நகரில் வீதியோர வியாபாரத்தை தடைசெய்ய கோரி திருகோணமலை பொதுச் சந்தை வியாபாரிகள் இன்று புதன்கிழமை (19) காலை 9.30 மணிக்கு மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அனுமதியற்ற வீதியோர வியாபாரத்தை உடனடியாக நிறுத்த அரச உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோசங்களை எழுப்பினர். தமது தொழில் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் திருகோணமலை நகராட்சி மன்ற செயலாளருக்கு மகஜர் ஒன்றும் கையளித்தனர்.
, வீதியோர வியாபாரத்தை தடைசெய்யக் கோரி திருகோணமலை மத்திய பொதுச் சந்தை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் !