ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
CCTV கமராக்கள் மூலம் 4,500க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் !

போக்குவரத்து விதிகளை மீறும் வாகன சாரதிகளுக்கு கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வீதிப் போக்குவரத்து விதிகளை மீறுதல், போக்குவரத்து சமிக்ஞைகளை கடைப்பிடிக்காமை, தடை செய்யப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துதல் மற்றும் போக்குவரத்து சமிக்ஞைகளில் சிவப்பு விளக்குகளை மீறி வாகனம் செலுத்துதல் போன்ற போக்குவரத்து விதிகளை சாரதிகள் மீறி செயற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய கொழும்பு நகரில் CCTV கமராக்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட போக்குவரத்து விதிகளை மீறிய 4,500 க்கும் மேற்பட்ட சாரதிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து திணைக்களத்தின் CCTV கமராக்கள் மூலம் பெறப்பட்ட காணொளி ஆதாரம் பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
, CCTV கமராக்கள் மூலம் 4,500க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் !