Tuesday, July 23, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Local NewsOther Local Newsவர்த்தக மாஃபியாக்கள் தடை ; வெதுப்பக உரிமையாளர் சங்கம் குற்றச்சாட்டு !

வர்த்தக மாஃபியாக்கள் தடை ; வெதுப்பக உரிமையாளர் சங்கம் குற்றச்சாட்டு !

மக்கள் நலன் கருதி, பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு, வர்த்தக மாஃபியாக்கள் இடையூறாக இருப்பதாக, அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கத் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கோதுமை மா, தேங்காய் எண்ணெய், முட்டை உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளுக்கு தேவையானப் பொருட்கள், அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

இது, எமது தொழிற்துறையைப் பாரியளவில் பாதித்துள்ள நிலையில், வெதுப்பக உற்பத்திகளின் விலையைக் குறைக்க முடியாதுள்ளது.

கோதுமை மாவின் விலையை, மேலும் 30 ரூபாவினாலும், முட்டை ஒன்றின் விலையை 20 ரூபாவினாலும் குறைக்க முடியும்.எனினும், வர்த்தக மாஃபியாக்கள் அதில் இலாபம் ஈட்டும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர்.

எனவே, இது தொடர்பில் விளக்கமளிப்பதற்கு சந்தர்ப்பம் ஒன்றை ஏற்படுத்தித் தருமாறு, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றோம் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர் சங்கத் தலைவர் என்.கே.ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

, வர்த்தக மாஃபியாக்கள் தடை ; வெதுப்பக உரிமையாளர் சங்கம் குற்றச்சாட்டு !

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்