திருமண விளம்பரங்கள் மூலம் பெண்களை இலக்காக வைத்து இணைய மோசடிகள் அதிகரிப்பு !
இணையத்தளத்தில் நடைபெறும் மோசடிகளில் சிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, பண மோசடிகள் தொடர்பில் 150 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கணனி குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் கணனி குற்றப்பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தர்ஷிகா குமாரி தலைமையில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை திருமண விளம்பரங்கள் மூலம் இளம் பெண்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஒருவர் கணனி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போதைய விசாரணைகளின் போது இவரது திருமண விளம்பரங்களில் ஏமாற்றமடைந்த பத்து இளம்பெண்கள் பற்றி தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேக நபர் பத்திரிகை விளம்பரங்களை வெளியிட்டு, புகைப்படங்கள் மற்றும் தகவல்களை வாட்ஸ்அப் மூலம் பரிமாறி பல இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இச்சந்தர்ப்பங்களில் சாரதியின் குழந்தையை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ஒரு யுவதியிடம் இரண்டு இலட்சம் ரூபாவை பெற்று ஏமாற்றியதாக கணனி குற்றப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
, திருமண விளம்பரங்கள் மூலம் பெண்களை இலக்காக வைத்து இணைய மோசடிகள் அதிகரிப்பு !