சட்டமா அதிபரின் சேவை நீடிப்பு : இறுதித் தீர்மானம் இன்று !
நாடாளுமன்றில் இன்று பிற்பகல், சட்டமா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவை நீடிப்பு தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சட்டமா அதிபருக்கு 6 மாத சேவை நீடிப்பு வழங்குமாறு பரிந்துரைத்துள்ளார். இந்த நிலையில் இன்று இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
சட்டமா அதிபரின் சேவைக்காலம் தொடர்பில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை பரிசீலிப்பதற்காக அரசியலமைப்பு பேரவை முன்னதாக இரண்டு தடவைகள் கூடிய போதிலும் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை.
இதேவேளை சட்டமா அதிபர் ராஜரத்தினத்தின் பதவிக்காலம் எதிர்வரும் 26ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
, சட்டமா அதிபரின் சேவை நீடிப்பு : இறுதித் தீர்மானம் இன்று !