ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

தந்தையை தாக்கிய மகள் விளக்கமறியலில் !

தனது எழுபது வயதான தந்தையை மகள் தாக்கியதாக நாவுல காவல்துறையினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் அப்பெண் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது சந்தேகநபருக்கு நாவுல பதில் நீதவான் ஷியாமலி விஜேரத்னஇ எதிர்வரும் 19ஆம் திகதி புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் அரங்கல கனுமுலய பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என நாவுல காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபரின் தந்தை நாவுல காவல் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டின் பிரகாரம்இ சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தியுள்ளனர்.

சந்தேகநபர் ஆண் ஒருவருடன் வீட்டுக்கு வந்து தங்க முற்பட்ட போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை சந்தேகநபரான பெண் தாக்கியுள்ளதாக காவல்துறையினர் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

, தந்தையை தாக்கிய மகள் விளக்கமறியலில் !

Back to top button