ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
வெளிநாட்டு யுவதி தொடருந்திலிருந்து வீழ்ந்து காயம் !
ஒஹிய – பட்டிபொல தொடருந்து நிலையங்களுக்கு இடைப்பட்ட 19ஆவது சுரங்கப் பகுதியில் தொடருந்திலிருந்து வீழ்ந்து வெளிநாட்டு யுவதியொருவர் காயமடைந்தார்.
கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த தொடருந்திலிருந்து நேற்று மாலை குறித்த யுவதி தவறி வீழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யுக்ரைன் நாட்டைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதியொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சுரங்கத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட குறித்த யுவதி ஹப்புத்தளை தொடருந்து நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டு பின்னர் நோயாளர் காவு வண்டி மூலம் தியத்தலாவை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டார்.
விபத்து தொடர்பில் ஹப்புத்தளை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
, வெளிநாட்டு யுவதி தொடருந்திலிருந்து வீழ்ந்து காயம் !