ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

2025ல் சொத்து வரி: நாணய நிதியம் பரிந்துரை !

2025 ஆம் ஆண்டளவில் நாட்டில் சொத்து வரியை நடைமுறைப்படுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியம் முன்மொழிந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அடுத்த வருடம் ஏப்ரலுக்குள் ஒட்டு மொத்தமாக அந்த வரியை அமுல்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்திருக்க வேண்டும் என்பதால், அவ்வாறு செய்ய முடியாத சூழ்நிலையினால், கணக்கிடப்பட்ட வாடகை வருமான வரியை விதிக்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் வசந்த அத்துகோரல தெரிவித்தார்.

நாட்டில் சொத்து வரி அமுல்படுத்தப்பட்டால் முறைக்கேடாக ஈட்டப்படும் பணம் குறித்த தகவல் தெரியவரும் என பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் குறிப்பிட்டுள்ளார்.

, 2025ல் சொத்து வரி: நாணய நிதியம் பரிந்துரை !

Back to top button