ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய வரி !

சர்வதேச நாணய நிதியம் (IMF) 2025ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் குடியிருப்புச் சொத்துக்களுக்கு விதிக்கப்படும் வாடகை வருமான வரியை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளது.

2026ஆம் ஆண்டிற்குள் இந்த வரி முறையை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை, இலக்கு வைத்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் அரசாங்க வருவாயை அதிகரிக்கும் நடவடிக்கையாக இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையுடனான கடன் வசதி திட்டத்தின் இரண்டாவது மீளாய்வின் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

, இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய வரி !

Back to top button