இராணுவச் செயற்பாடுகளுக்காக ரஷ்யா சென்றுள்ள இலங்கையர்களை அழைத்து வருவது தொடர்பில் கலந்துரையாடல் !

இராணுவச் செயற்பாடுகளுக்காக ரஷ்யா சென்றுள்ள இலங்கையின் முன்னாள் இராணுவச் சிப்பாய்களை நாட்டுக்கு திருப்பி வரவழைப்பதற்கு அவசியமான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான கலந்துரையாடல் எதிர்வரும் வாரத்தில் நடைபெறும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று(14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்தார்.
ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள முன்னாள் இராணுவ வீரர்கள் குறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உடன் கலந்துரையாடினோம்.
இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உள்ளிட்ட குழுவினர் ரஷ்யாவிற்கு விஜயம் செய்ய உள்ளனர்.
இது தொடர்பான கலந்துரையாடல்கள் ஜூன் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் ரஷ்யாவில் நடைபெறும். இதேவேளை, மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்பதற்கான கலந்துரையாடல்களும் இந்நாட்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.
, இராணுவச் செயற்பாடுகளுக்காக ரஷ்யா சென்றுள்ள இலங்கையர்களை அழைத்து வருவது தொடர்பில் கலந்துரையாடல் !