ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

நிறுவனமொன்றில் தங்க நகைகள் திருட்டு ; இருவர் கைது !

பேலியகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள நிறுவனமொன்றில் கடந்த 13 ஆம் திகதி தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று (14) கைது செய்யப்பட்டதாக பேலியகொடை பொலிஸார் தெரிவித்தனர்.

திருடப்பட்ட நகைகளின் பெறுமதி 21 இலட்சம் ரூபா என பொலிஸார் தெரிவித்தனர்.

பேலியகொடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எத்துல்கோட்டை மற்றும் பேராதனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 29 மற்றும் 52 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

, நிறுவனமொன்றில் தங்க நகைகள் திருட்டு ; இருவர் கைது !

Back to top button