ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
நாட்டில் போதைப்பொருள் கடத்தல்கள் குறைவடைந்துள்ளன ; பொலிஸ் ஊடக பேச்சாளர் !
மேல் மற்றும் தென் மாகாணங்களைப் போன்று ஏனைய மாகாணங்களிலும் பரவி வந்த போதைப்பொருள் கடத்தல்கள் தற்போது குறைவடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் பின்னரே போதைப்பொருள் கடத்தல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்கள் குறைவடைந்துள்ளன.
பாதாள உலகக் கும்பலை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் இதுவரை பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 454 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், யுக்திய நடவடிக்கை ஜூலை மாதத்திலிருந்து மிகவும் வித்தியாசமான முறையில் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
, நாட்டில் போதைப்பொருள் கடத்தல்கள் குறைவடைந்துள்ளன ; பொலிஸ் ஊடக பேச்சாளர் !