Saturday, September 7, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Local NewsOther Local Newsகதிர்காமம் காட்டுப்பாதையை 30 ஆம் திகதியே திறக்கவும் யாத்திரிகர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை !

கதிர்காமம் காட்டுப்பாதையை 30 ஆம் திகதியே திறக்கவும் யாத்திரிகர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை !

கதிர்காமத்திற்கு காட்டுப்பாதை வழியாக உகந்தையிலிருந்து செல்லும் காட்டுப்பாதை எதிர்வரும் 30 ஆம் திகதி திறப்பதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அதனை எதிர்வரும் 2 ஆம் திகதி திறப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக நாம் அறிகின்றோம் இதனால் நாம் வெகுவாக மனமுடைந்துள்ளோம் என யாழ்ப்பாணத்திலிருந்து கால்நடையாக கதிர்காமம் நோக்கிச் செல்லும் யாத்திரிகர் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதியிலிருந்து கதிர்காமம் நோக்கிச் செல்லும் 90 நபர்பளைக் கொண்ட யாத்திரிகர் குழு வியாழக்கிழமை(13.06.2024) மாலை மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்தி ஆலயத்தை சென்றடைந்தனர். இந்நிலையில் அக்குழு அவ்வாலயத்தில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்கள் கண்ணீர் மல்க இவ்வாறு தெரிவித்தனர்.

தேற்றாத்தீவு கொம்புச்சந்தி ஆலயத்திலிருந்து புறப்பட்ட யாத்திரிகர்கள் களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்திற்குச் சென்றனர்.

இந்நிலையில் களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வீதியில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சந்தித்தார். பாராளுமன்ற உறுப்பினரிடமும் தமது கோரிக்கையை அவர்கள் தெரிவித்தனர். இவ்விடையம் குறித்து தான் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாகவும், எதிர்வரும் 30 ஆம் திகதியே காட்டுப்பாதையைத் திறப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுனர் உறுத்தியளித்துள்ளதாகவும் இதற்காகவேண்டி எதிர்வரும் 20 ஆம் திகதி மாலை 3 மணிக்கு அம்பாறை கச்சேரியில் கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் யாத்திரிகர்களிடத்தில் தெரிவித்தார்.

எதிர்வரும் 30 ஆம் திகதி காட்டுப்பாதை திறக்கப்படும் பட்சத்திலேயே 06.07.2024 அன்று கதிர்காம ஆலய கொடியேற்ற நிகழ்விற்குச் செல்ல முடியும். மாறாக 02.07.2024 அன்று காட்டுப்பாதை திறந்தால் அது கொடியேற்ற நிகழ்விற்குச் செல்ல முடியாமல்போகும். எனவே 30 ஆம் திகதியே பாதையைத் திறப்பதற்குரிய முடிவை தீர்க்கமாக மேற்கொண்டு தருமாறு யாத்திரிகர்கள் மேற்படி பாராளுமன்ற உறுப்பினரிடம் வலியுறுத்தினர்.

, கதிர்காமம் காட்டுப்பாதையை 30 ஆம் திகதியே திறக்கவும் யாத்திரிகர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை !

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்