ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் பரீட்சைகள் தொடர்பான விசேட அறிவிப்பு!
அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் தரம் I, II மற்றும் III ஆம் வகுப்புகளுக்கான பரீட்சைகள் நடத்தப்படும் திகதி தொடர்பான அறிவிப்பை இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகம் வெளியிட்டுள்ளது.
இதற்கான பரீட்சைகள் ஜூன் மாதம் 30 ஆம் திகதி அன்று நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக 52,756 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பரீட்சை நாடளாவிய ரீதியில் 353 நிலையங்களில் நடைபெறவுள்ளது.
பரீட்சைக்கான நுழைவுச் சீட்டுகள் விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனைப் பெற்றுக்கொள்ளாத பரீட்சார்த்திகள் www.slida.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக தங்களின் நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
, அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் பரீட்சைகள் தொடர்பான விசேட அறிவிப்பு!