Tuesday, July 23, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Local NewsOther Local Newsஇலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த 60 மூட்டை இஞ்சி பறிமுதல்!

இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த 60 மூட்டை இஞ்சி பறிமுதல்!

தமிழகத்தின் மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த 60 மூட்டை இஞ்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

ராமநாதபுரம் மாவட்டம் இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் ராமநாதபுரம் மாவட்ட கடற்கரையிலிருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுப்படகில் இலங்கைக்கு கடல் அட்டை, சமையல் மஞ்சள், ஏலக்காய், பிடி இலை, சமையல் இஞ்சி உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவு கடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் – ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே மரக்கையார் பட்டணம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு சட்ட விரோதமாக இஞ்சி கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 60 மூட்டை இஞ்சிகளை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

, இலங்கைக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த 60 மூட்டை இஞ்சி பறிமுதல்!

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்