மொனராகலை தணமல்வில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கஹகுருல்லன்பெலெஸ்ஸ பகுதியில் கஞ்சா செடிகளுடன் சந்தேக நபரொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொனராகலை தணமல்வில பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 9,140 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தணமல்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
, 9,140 கஞ்சா செடிகளுடன் நபரொருவர் கைது !